ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வரலாற்றில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் காலடியை முதல் முதலாக பதித்த சில இந்திய பெண்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி:

இந்தியாவை சேர்ந்த இவர் 1987 ஆம் ஆண்டு முதல் பெண் மருத்துவர் ஆனார். மேற்கிந்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் இந்திய பெண் இவர் தான். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கு சென்ற முதல் பெண்மணியும் இவராவார்.

ரோஷினி சர்மா:

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

அன்னை தெரசா:

1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்திய பெண் அன்னை தெரசா. இவர் பல மிஷனரிஸ் ஆப் சேரிட்டியை நிறுவி சமூகப் பணிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் .

அருணிமா சின்ஹா:

முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி பெண் இவர்தான். தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு திருடர்களை எதிர்க்கும் போது ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட போது இவருடைய ஒரு கால் முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டது.

ஆரதி சாஹா:

இவர் முதல் ஆங்கில கால்வாயை கடந்த இந்திய பெண் ஆவார். 1959 ஆம் ஆண்டு ஆங்கில கால்வாயை கடந்தார். 1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பெற்ற முதல் பெண் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இந்திரா காந்தி:

1966 முதல் 1977 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். மேலும் 1971 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.

மிதாலி ராஜ்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அதுவும் இந்த சாதனையை உலக அளவில் முதல் முதலில் பெற்றவரும் இவர்தான்.

பிரதிபா பாட்டீல்:

இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் இவர்தான். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவி வகித்தார்.

கல்பனா சாவ்லா:

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா. இவர் 1997 ஆம் ஆண்டு ஒரு பணி நிபுணராகவும் முதன்மை ரோபோடிக்கை ஆப்பரேட்டராகவும் விண்வெளிக்குச் சென்றார்.

கிரண்பேடி:

1972 ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். இந்தியாவின் முதல் பெண் அதிகாரி இவர்தான். 2003 ஆம் ஆண்டில் கிரண்பேடி ஐக்கிய நாடுகளின் சிவில் போலீஸ் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட முதல் பெண்.

சானியா மிர்சா:

டென்னிஸ் வீராங்கனை ஆன இவர் 2005ஆம் ஆண்டு பெண்கள் டென்னிஸ் சங்கம் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.