சட்டமன்ற உறுப்பினரான கே.பி முனுசாமி  மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய போது, வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற போற்றுதலுக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களே…  தலைமைக் கழக நிர்வாகிகளே….  மாவட்ட கழக செயலாளர்களே… ஒன்றிய – நகர – பேரூர் – கழக செயலாளர்களே… சார்பு அமைப்பினுடைய நிர்வாகிகளே…  நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களே…  மக்களின்  உள்ளாட்சி அமைப்பின் உடைய பிரதிநிதிகளே…

தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு,  கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தொண்டனும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு இரவென்றும் பாராமல் பகல் என்றும் பாராமல் உண்னோவே உண்ணவில்லையா என்று கூட நினைக்காமல் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களே உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

இந்த எழுச்சி மாநாடு வெற்றி பெற்றுவிட்டது. இந்த வெற்றி பெற்ற காரணத்தினால் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் அவர்கள் ஒரு மாநில தலைவர் என்ற நிலையில் இருந்து மாநாடு வெற்றி பெற்றதனால் இன்று இந்த நிமிடத்தில் இருந்து தேசிய தலைவர்களில் ஒரு தலைவராக உருவாகிவிட்டார். தேசிய தலைவர் என்று வருகிற போது தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்கள்,  இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்,

இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவரைத் தொடர்ந்து அவருடைய அரசியல் வாரிசாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய எடப்பாடியார் அவர்கள் இன்று தேசிய தலைவராக உருவாகி இருக்கிறார்கள். அப்படி தேசிய தலைவராக உருவாக்கிய லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் பாதங்களைத் தொட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.