மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீதம் ஒப்புதல் மதிப்பீடுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மெக்ஸிகோ அதிபர் லாபஸ் ஒபராடோர் 68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்சாட் 62 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் இந்த பட்டியலில் 40 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டை பெற்று 7 மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்று பட்டியலில் 13-வது இடத்தை பிடித்துள்ளார்.