தொழில் அதிபர் லெஜன்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தி லெஜென்ட். இந்த திரைப்படம் வசூல் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது இப்படத்தில் லெஜன்ட் சரவணன் உடன் இணைந்து ஊர்வசி ரவுதெலா, விவேக் ரோபோ, ஷங்கர் சுமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிதிருந்தனர்.

படம் வெளிவந்து பல மாதங்கள் ஆகியும் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று முன்தினம் வெளியானது. மேலும் லெஜெண்ட் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தார்களோ என்னவோ முதல் நாளே மக்களால் வரவேற்கப்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த லெஜெண்ட் சரவணன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.