மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதி ராவ். செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹாய் சினாமிக்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவ் உடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் தனது கருத்துக்கள் மூலம் சித்தார்த் தற்போது காதல் வலையில் விழுந்து விட்டாரோ என்ற கேள்விகள் எழுகிறது. மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை அதிதி ராவ் மறுத்துள்ளார். இது குறித்து பேசி அவர் மக்கள் அப்படி தான் பேசுவார்கள். அதை தடுக்க முடியாது என்றும் எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.