உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் விலகிய நிலையில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் பரிந்துரைத்துள்ளார். உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீடு திட்டங்களுக்கு கடன்களை வழங்கும் ஒரு பன்னாட்டு நிதி நிறுவனமாகும். மேலும் வெளி முதலீடு பன்னாட்டு வணிகங்களை உருவாக்கி கொடுப்பதிலும் உலக வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது.
இதனால் உலக வங்கியின் தலைவர் என்பது பொதுவாக அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் உலக வங்கியில் தலைவராக டேவிட் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை பரிந்துரை செய்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக தொன்று தொட்டு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவது போல் உலக வங்கியின் தலைவராக எப்போதும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் தான் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற அஜய் பங்கா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் பங்காவின் வயது 63 ஆகும். இவர் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மாஸ்டர் கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 11 ஆண்டுகள் வரை பணியாற்றி தற்போது ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். மேலும் சுமார் 30 ஆண்டுகளாக உலகளாவிய நிறுவனங்களில் பணியாற்றி வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.