ஃப்ளோரிடாவில் 21 வயது இளைஞர் ஒருவர் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து உறங்கியதால் கண்ணை இழக்க நேரிட்டுள்ளது. கடின உழைப்பு மிகுந்த நாள் ஒன்றின் உடல் சோர்வு காரணமாக உறங்க சென்றதாக மைக் தெரிவிக்கிறார். உடல் சோர்வினால் தான் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றாமல் உறங்கியதாக அவர் தெரிவிக்கின்றார். கடந்த ஏழு ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதாகவும் அவரது கண்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் லென்ஸ்களை அகற்றாமல் உறங்கிய போது சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த முறை ஒரு சிறு தவறினால் ஒரு கண்ணை இழந்துள்ளது எனக்கு மிகவும் சோகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அக்கன்ட் தாமோ பேக் கிராவிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் அவரது ஒரு கண் பறிபோய்விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிய வகையிலான ஒரு ஒட்டுண்ணி அவரது கண்ணை சாப்பிட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காண்டாக்ட் லென்ஸ் அணிவதன் காரணமாக ஏற்பட்டுள்ள கண் உபாதைகளின் காரணமாக உருவாகிய இந்த ஒட்டுண்ணி ஒரு கண்ணையே உணவாக உட்கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. தமக்கு ஏற்பட்டது போல் வேறு எவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிட கூடாது என்ற காரணத்தினால் அவர் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் நிதியும் திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.