அமெரிக்க நாட்டில் ஓகியோ மாகாணத்தில் உலோக உற்பத்தி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தினால் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலையில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்வதற்காக தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் ஒரு விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டு உள்ளனர்.

இந்த விமானம் பில் அன்ட் ஹிலாரி கிளின்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையின் நடுவே விழுந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்தக் கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உடல் கருகி பலியாகி உள்ளனர்.