இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஜெயலலிதா படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால் சிவராஜ்குமார், மற்றும் தமன்னா ஆகையோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஜூலை மாதத்தின் இறுதியில் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.