தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் 125 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம். மேலும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.