தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று பல வருடங்களாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாகவே அரசியலில் களமிறங்கும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட மதுரை மாவட்டத்தில் நடத்துவதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நடிகர் விஜய் பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதனால்தான் அடுத்தடுத்த படங்களில் நடிகர் விஜய் உடனே கமிட் ஆகிறாராம். தற்போது ஒரு படத்திற்கு 120 கோடிக்கு மேல் விஜய் சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.