தற்போது முக்கிய முக்கியமான அடுத்த நகர்வாகவும், அடுத்து ஒரு நீட்சியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே நிதிஷ்குமார் விலகி இருந்த நிலையில் தற்பொழுது மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உடைய ஸ்டேட்மென்ட் மிகவும் முக்கியமானதாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அவர் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகவோ கூட்டணியில்  இருக்கக்கூடிய கட்சிகளை விமர்சித்திருக்கிறார் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஏனென்றால் அவர் பயன்படுத்தியிருக்கக்கூடிய வார்த்தை என்பது தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தங்களது சிறகுகளை சிலிர்க்க ஆரம்பித்து வருகின்றன என்று விமர்சனம் செய்திருக்கிறார். அவர் அதை காங்கிரசை குறிப்பிடுகிறாரா அல்லது மற்ற கட்சிகளை விமர்சிக்கின்றாரா ? என்று  தெரியவில்லை. ஆனால் கூட்டணியில்  இருக்கக்கூடிய சில கட்சிகளை அவர் விமர்சித்திருக்கிறார்.

தேர்தல் நேரம் என்று வந்தால் மட்டும் சிலர் சிலிர்க்க  ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதான ஒரு மிக முக்கியமான  ஸ்டேட்மெண்ட்டை அவர் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாஜக உடனடியாக எங்களது சண்டை,  போர் தொடரும். நாங்கள் தனித்தே போராடுகிறோம். பாஜகவை யாராவது ஒரு கட்சி வீழ்த்த முடியும் என்றால்,  அது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தான் என தற்போது  அவர் கூறியிருக்கின்றார்.

பாரத் ஜூடோ யாத்திரை தற்போது நடைபெற்று வரக்கூடிய சூழலில் அந்த யாத்திரைக்கு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற ஒரு சர்ச்சை ஒரு பக்கம் இருக்கின்றது.  நிதீஷ்குமார் உடைய ஸ்டேட்மெண்ட் இன்னொரு பக்கம் இருக்கின்றது. ஆம் ஆத்மி கட்சியும்,  காங்கிரஸ் கட்சியும் இணைந்து    சண்டிகரில் நடந்த தேர்தலில் மேயர் தேர்தலில் அவர்கள் தோல்வியை தழுவி இருக்கின்றார்கள்.

நேற்றைய தினம் சமாஜ்வாதி கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படி ஏராளமான விஷயங்கள் இந்தியா கூட்டணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மையப்படுத்தி நடந்து வரக்கூடிய சூழலில் தொடர்ந்து நாளுக்கு நாள் இந்த கூட்டணியில் விரிசல் அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே நமக்கு தெரியும் மேற்குவங்க மாநிலத்தின் மூத்த  தலைவராக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் அதிரஞ்சன் சவுத்ரி வெளிப்படையான விமர்சனங்களை மம்தா பானர்ஜியின் மீது தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார். அதேபோல மாநிலத்தில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளும், மம்தா பானர்ஜியை  விமர்சனம் செய்வதை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்கள்.

அதனால் இந்த மூன்று கட்சிகளுமே இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இப்படி ஒரு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடக்கூடிய சூழலில் மம்தா பானர்ஜி உடைய மிக முக்கியமான இந்த ஸ்டேட்மென்ட் ஒரு துருப்பு  சீட்டாகவே பார்க்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டணி எந்த அளவிற்கு வலுவுடன் இருக்கும் என்பதை இது கேள்விக்குள் ஆக்கும் என்பதாக புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஏனென்றால் வட மாநிலங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கிழக்கு பகுதியில் கோலோச்ச கூடிய  இரண்டு முக்கியமான கட்சிகளாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியும்,  நிதிஷ்குமாரின்  JDU  உம் இருக்கக்கூடிய சூழலில் தற்போது ஒருவர் வெளிப்படையாகவே வெளியே சென்று விட்டார். இன்னொருவர் தனித்து போட்டியிட போகிறோம், தனித்து போராட போகிறோம் என்ற ஒரு விஷயத்தை அவர் கூறியிருக்கிறார்.

எனவே ஒரு கூட்டணி அமைத்ததில் ஒரு பெரும் நிலப்பகுதியைச் சார்ந்த இரண்டு கட்சிகள் தற்போது கூட்டணியில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இனி கூட்டணியில் இருக்க கூடிய மற்ற கட்சிகள் இதை எப்படி பார்க்க போகின்றார்கள் ? என்பது தான் இனி அடுத்தடுத்து வரக்கூடிய நேரங்களில் தெரியும். இன்றே கூட இதற்கான ரியாக்ஷன்கள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.