
ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி செல்வதாக சந்தேகமடைந்த நிலையில் அந்த ஓட்டுனரை பிடித்து ஜேசிபி எந்திரத்தில் கட்டி வைத்து, அடித்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். தேஷ்பால் சிங் ஓட்டுனரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தேஜ்பால் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது எனவும், மணல் கடத்தலில் சட்ட விரோதமாக ஈடுபடுவார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பலத்த காயங்களுடன் தற்போது ஓட்டுநர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள் .