செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  முக்குலத்தோரை பொறுத்தவரை ஜாதி, மதம் பார்க்காமல்  வாக்களிக்க கூடியவர்கள். ஒட்டுமொத்தமாக கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான்…  அதுவும் நம்முடைய பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி,  புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி,  அதே போல அம்மா மறைவுக்கு பிறகு எடப்பாடியார்  தலைமையில் உள்ள அதிமுகவிற்கு முக்குலத்தோர் வாக்கு முழுமையான அளவிற்கு  வரும்.

அதில் எந்தவித மாறுபாடும் இல்லை. உதாரணத்துக்கு தென் மாவட்டத்த்தில் கடந்த தேர்தலில் கூட சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயித்த நிலை உண்டு. அதேபோன்று சில தொகுதிகள்தான் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மூக்குலத்தோர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்திற்கு…

. இரட்டை இலைக்கு தான் என்றைக்குமே விழும் என்பதை  தெளிவுபடுத்த கடமைப்படுத்துகிறேன். 10.5% இடஒதுக்கீட்டால்  எந்த பாதிப்பும் ஏற்படாது.  கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரிய வித்தியாசம் கிடையாது. பல தொகுதிகள் வென்று உள்ளோம்.  சில தொகுதிகளில் சொற்ப வாக்கு பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் பார்க்கும் போது  முக்குலத்தோர் வாக்குகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு….  இரட்டை இலைக்கு விழுந்ததாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.