தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலேயே போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் தனது பாணியில் கூலாகப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தேர்தலில் நான் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர்தான் (முதல்வர் ஸ்டாலின்) இறுதி முடிவு எடுப்பார்” என்று கூறி பந்தை கட்சித் தலைமையின் பக்கம் திருப்பியுள்ளார்.

தற்போதைய எம்.எல்.ஏ-வாகத் தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் உதயநிதி, மீண்டும் அதே தொகுதியில் நிற்பாரா? அல்லது வேறு பெரிய தொகுதிக்கு மாறுவாரா? என்ற சஸ்பென்ஸ் நீடிப்பதால், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.