தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஒரு புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விஜய் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தங்குவதற்கு வேறு இடம் இல்லை என்றும், அதனால் இந்த விவாகரத்து வழக்கு முடியும் வரை அல்லது தனக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை நீலாங்கரை இல்லத்திலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குள் நுழைய விஜய் அனுமதி மறுப்பதாகக் கூறி சங்கீதா இந்த மனுவை அளித்துள்ளது, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
