இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போர் கொழும்பு மைதானத்தில் அனல் பறந்து வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய ஹை-வோல்டேஜ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மின்னொளியில் ஜொலிக்கும் டி20 உலகக்கோப்பையை கைகளில் ஏந்தியபடி ரோகித் சர்மா கம்பீரமாக மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.

இந்திய அணி ஏற்கனவே களத்தில் பாகிஸ்தானை கதறவிட்டு வரும் சூழலில், கேப்டன் ரோகித் கோப்பையுடன் வந்த அந்த நிமிடம் “இந்த முறை கப்பு நமக்குத்தான்” என்பதை உறுதிப்படுத்துவது போல இருந்தது.

காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாவிட்டாலும், தனது அணியை உற்சாகப்படுத்த ரோகித் சர்மா நேரில் வந்திருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கோப்பையுடன் அவர் நடந்து வந்த அந்த ஸ்டைலான வீடியோவை பார்த்து இந்திய ரசிகர்கள் மைதானத்தையே அதிர வைத்தனர்.