
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் குல்பர்க் கிரின்ஸில் என்ற பகுதியில் புதிதாகப் பிறந்த 9 நாய் குட்டிகள் இரக்கமின்றி எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் வசித்து வரும் விலங்கு பிரியாரான இசட் ராசா என்பவர் இப்பதிவை வெளியிட்டு தனது வருத்தத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவில்,”கண்களை திறக்காத ஒன்பது நாய்க்குட்டிகள் உயிருடன் எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இணையதளத்தில் வெளியானது.
இஸ்லாமாபாத்தில் உள்ள டாக்டர் பைசல் கான் என்பவரது செல்லப்பிராணிகளான 9 நாய்க்குட்டிகள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது எனவும், ஆரம்பத்திலேயே 8 நாய் குட்டிகள் இறந்து விட்டதாகவும் ஒரே ஒரு நாய்க்குட்டி உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மருத்துவர் நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் ஆனால் எவ்வளவு போராடியும் சில மணி நேரங்களில் இரவு அந்த நாய்க்குட்டி இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் விலங்கு நல அமைப்புகள் விலங்கு பிரியர்கள் என அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விலங்குகள் நல அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், வாயில்லாத ஜீவன்களை வதைப்பது மிகவும் தவறானது எனவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.