கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35 B விமானம் எரிபொருள் குறைபாட்டினாலும், வானிலை காரணமாகவும் கடந்த ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து 3 வாரங்களாக அந்த விமானம் தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்காக பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தற்போது ஹேங்கருக்கு மாற்றப்பட்ட விமானத்தை சரி செய்வதற்காக பிரிட்டனிலிருந்து பொறியாளர்கள் குழு அட்லஸ் விமானத்தில் திருவனந்தபுரம் வந்துள்ளது. அந்த குழுவானது விமானத்தை இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமா? இல்லையென்றால் இங்கேயே பழுது பார்க்க வேண்டுமா என்பதை முடிவு செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து F-35B ஸ்டெல்த் போர் விமானத்தின் மதிப்பு 110 மில்லியன் டாலர் என்றும், அதிக ரகசிய தொழில்நுட்பத்தை கொண்ட ஜெட் விமானம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதிலுள்ள ரகசிய தொழில்நுட்பம் கசிந்தால் ராணுவ ரகசியங்கள் வெளியாகி ஆபத்து நேரிடலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.