உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் பகுதியில் பிரதீப் என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த ஹன்சிகா (22) என்ற இளம் பெண் மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவரும் காதலித்த நிலையில் அதே பகுதியில் ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர்.
இந்நிலையில் ஹன்சிகாவின் நடத்தையில் பிரதீப்புக்கு சந்தேகம் எழுந்தது. அவர் வேறு ஒருவருடன் பழகுவதாக பிரதீப் சந்தேகம் கொண்டு தன் காதலியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதில் ஹன்சிகா நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஒரு சாலை வழியாக நடந்து சென்ற போது பிரதீப் அங்கு வந்தார். அவர் ஹன்சிகாவுடன் நடுரோட்டில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து அந்த பெண்ணை கொடூரமாக கொன்றார்.
பின்னர் பிரதீப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஹன்சிகா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்போது போலீசார் தப்பி ஓடிய பிரதிப்பை வலைவீசை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
