இந்தியாவில் இந்தூரை சேர்ந்த துரு சவுத்ரி, மித்ரன் லதானியா, மற்றும் மிருதுள் ஜெயின் ஆகிய 3 இளைஞர்கள் மின்சாரம் இல்லாமல் தடுப்பூசிகள், உடல் உறுப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

அதாவது குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் கரையும் போது உப்புக்கள் வெப்பத்தை உறிஞ்சி உட்புறத்தை குளிர்விக்கும் என்ற ஒரு வேதியல் செயல்முறையை பயன்படுத்தி தெர்மாவால்ட் என்ற உப்பு இயங்கும் குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக ஐஐடி ஆய்வகத்தில் இருந்து 150 உப்புகளை வாங்கி அந்த இளைஞர்கள் பரிசோதித்துள்ளனர் அதில் அமோனியம் குளோரைடு தடுப்பூசிகளுக்கு ஏற்ற 2-6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிப்பது கண்டறிந்தனர்.

அதே நேரத்தில் பேரியம் ஹைட்ராக்சைடு ஆக்டோஹைட்ரேட் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை உருவாக்குகிறது இதன் மூலம் குளிர்சாதன பெட்டியை கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாமல் இயங்க வைக்க முடியும்.

மேலும் அந்த உப்பை மீட்டெடுக்க கரைசலை கொதிக்க வைப்பதன் மூலம் அதை மீட்டமைக்கலாம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த புதுமை திட்டத்தினை 120 கிராமப்புற மருத்துவமனைகளில் சோதிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.