கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள ஜவுளிக்கடையில் நடைபெற்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயதான அலி என்பவர் இந்த ஜவுளிக்கடையை நடத்தி வந்தார்.

இவருடன் மேலாளராக 38 வயதான திவ்யாமோள் என்பவரும் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக துணி வியாபாரத்தில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக வெளியூருக்கு செல்லலாம் என நினைத்திருந்த பணியாளர்கள், கடந்த 17-ம் தேதி இரவு கடை அடைக்கப்பட்டதை அடுத்து வழக்கம் போல் காலை வேலைக்கு வந்தனர்.

ஆனால், கடை திறக்கப்படாமல் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் எழுந்தது. ததகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷட்டரை உடைத்து உள்ளே சென்றபோது, அலியும், திவ்யாமோளும் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே இரவில் தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டமா அல்லது தனிப்பட்ட காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அலிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளதோடு, திவ்யாமோளுக்கும் கணவரும், இரண்டு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.