இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். குறிப்பாகப் பொதுப் பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடமில்லாமல் மக்கள் அவதிப்படுவது வாடிக்கை. இந்நிலையில், ரயிலின் மேல் படுக்கை கம்பிகளில் பெட்ஷீட்டை (Bedsheet) கட்டி, ஊஞ்சல் போலத் தொங்கிய நபர் ஒருவரின் வீடியோ இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
கூட்ட நெரிசலில் படுக்க இடமில்லாததால், அந்த நபர் தனது ஷூக்களை மின்விசிறியின் மேல் வைத்துவிட்டு, பெட்ஷீட்டில் மிக ஜாலியாக ஏறிப் படுத்துள்ளார்.
Absolute peak Indian Railways Moment
byu/imfrom_mars_ inindianrailways
ஆனால் அந்த நபரின் சந்தோஷம் சில வினாடிகள் கூட நீடிக்கவில்லை. பெட்ஷீட்டின் முடிச்சு எதிர்பாராத விதமாக அவிழ்ந்ததில், அவர் ‘தொப்’ எனத் தரையில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த சக பயணிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 2023-ல் முதன்முதலில் வெளியான இந்த வீடியோ, இப்போது ‘ரெடிட்’ தளத்தில் “இந்திய ரயில்வேயின் உச்சக்கட்ட தருணம்” என்ற பெயரில் மீண்டும் வைரலாகி 500-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. “சாகசம் செய்யப் போய் இப்படிச் சங்கடமாகி விட்டதே” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
