தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20 ஆம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனி தேர்வர்களின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை வந்து உள்ளது.
அதன்படி இணையத்தில் பதிவுசெய்த தனி தேர்வர்கள் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து தங்களுக்கான தேர்வு அணிகளை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் விபரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.