பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் ரம்யா சுப்ரமணியன். இவர் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தன் சமூகவலைதளத்தில் அதுகுறித்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இப்போது இவர் உடல் பருமன் குறைப்பது பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நிலையில் ரம்யா நடிகர் விஜய்யை சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கி உள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ரம்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.