தென்னிந்திய மாநிலங்களில் சிறந்த நடிகர்கள் யார் என்று llHB ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் நடிகர் சூர்யா தமிழில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் பஹத் பாசில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கன்னட திரையுலைகள் யஷ் முதலிடம் பிடித்துள்ளார். 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 5,246 பேர் பங்கேற்றனர். தமிழில் சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்னிந்திய மாநிலங்களில் சிறந்த நடிகர்கள் யார் என்று நடத்திய ஆய்வில் நடிகர் சூர்யா தமிழில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.