தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்குத்து பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மற்றொரு சர்வதேச விருதுக்கும் இரண்டு பிரிவுகளில் தேர்வாகி விருதுகளை வாங்கி உள்ளது. அதன்படி சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக்கூத்து) ஆகிய இரண்டு பிரிவுகளில் சர்வதேச அளவிலான க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் கிடைத்துள்ளது.