பிரபல நடிகை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் 2016ஆம் வருடம் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மம்தா மோகந்தாஸ் இதன்பின் குரு என் ஆளு,  தடையறத்தாக்க, எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கின்றார். மேலும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

இவருக்கு 38 வயதான நிலையில் தற்போது அரிய வகை நோயான தோல் நிறமி இழத்தலால் பாதிக்கப்பட்டுள்ளார். தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகின்றது. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்து நான் நிறம் இழந்து வருகின்றேன் என பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவை பார்த்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)