பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சென்ற அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 99 நாட்களை நெருங்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏ.டி.கே வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.