குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் “ஜப்பான்”. இந்த படத்தில் நாயகியாக துப்பறிவாளன், நம்மவீட்டு பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியது. இந்த நிலையில் இப்படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. ரவுடி வேடத்தில் கார்த்தி கோபமாக நிற்கும் இந்த போஸ்டர் இணையத்தை வைரலாகி வருகிறது.