நடிகர் சிவகார்த்திகேயன் டைரக்டர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் மாவீரன் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது மனைவி, மகள், மகனுடன் இருக்கும் புது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.