பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரக்கூடிய “தங்கலான்” படத்தின் புது அப்டேட் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தினை அடிப்படையாக கொண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகி வருகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி போன்றோரும் முக்கியமான  வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புது அப்டேட் இன்று (ஜன,.16) மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.