திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு இருக்கக்கூடிய அனைவரும்… ஒரே ஒரு நாள் கூடி… கைதட்டி… விசில் அடித்து… கலைகின்ற கூட்டம் கிடையாது, நம்முடைய இளைஞர் அணி கூட்டம்…. நீங்கள்  ஒவ்வொருவரும் பெரியாரின் உடைய வாரிசுகள்,  கொள்கை வாரிசுகள்….  பேரறிஞர் அண்ணாவின் உடைய வாரிசுகள்,  கொள்கை வாரிசுகள்…. கலைஞருடைய வாரிசுகள்,  கொள்கை  வாரிசுகளாக நீங்க இருக்க வேண்டும்.

நம்முடைய கட்சியின் கொள்கை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அது போல ஒரு சின்ன கதை… ஒரு சாவி… ஒரு பூட்டு… ஒரு சுத்தியல்…. இந்த பூட்டு பூட்டப்பட்டிருக்கிறது…. இந்த சுத்தியல்,  இந்த பூட்டை திறப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தது…  தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது….. ஆனால் பூட்டு திறக்க வில்லை. ஆனால் சாவி என்ன பண்ணது ? ரொம்ப சுலபமாக பூட்டை திறந்து விட்டது…. இந்த சுத்தியல் போய் சாயிடம் கேட்டது.

எனக்கு புரியவில்லை….  நான் எவ்வளவு பெரிதாக இருக்கிறேன்… பலமாக இருக்கிறேன்….. ஆனால் நீ இவ்வளவு சின்னதாக இருக்கிறாய்… ஆனால் உன்னால்  மட்டும் எப்படி இந்த பூட்டை,  இவ்வளவு சுலபமாக திறக்க முடிந்தது என்று கேட்டது ? அதற்கு சாவி  சொல்லுச்சு… உண்மைதான்,  நீ என்ன விட பெருசா இருக்குற…. என்ன விட பலசாலி தான்…. ஆனால் நீ வந்து பூட்டை திறப்பதற்கு,  பூட்டோட தலையில் அடிக்கிறாய்….

ஆனால் நான் பூட்டோட இதயத்தை போய் தொட்டு,  சுலபமாக திறந்து விடுகிறேன்…..  நான் சாவின்னு சொன்னது திமுகவை சொல்லுகிறேன்…. நம்முடைய தலைவரை சொல்லுகிறேன்….. சுத்தியல் என்று சொல்லுவது ஒன்றிய  பாஜக அரசை சொல்லுகிறேன். பூட்டு என்று சொன்னது நம்முடைய தமிழ்நாட்டைச் சொல்கிறேன்….

ஒன்றிய பாஜக அரசு எவ்வளவுதான் முயற்சித்தாலும்….  எவ்வளவுதான் தமிழனுடைய தலையை அடித்தாலும்…..  நம்முடைய மக்களுடைய மனதை தொடுகின்ற  சாவியை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்…. பெரியார் அவர்களும்… அண்ணா அவர்களும்… நம்முடைய தலைவர் கையில்தான் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும் என தெரிவித்தார்.