தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவிருக்கும் விஜய், தளபதி 69 படத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்பதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே வெளியான தி கோட் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தளபதி 69 படம் மேலும் பெரிய வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தளபதி 69 படத்தை பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரியவந்திருந்த நிலையில், இப்போது இந்த படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழில் முதல்முறையாக படம் தயாரிக்கும் நிலையில் அது தளபதியின் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதாவது நடிகர் விஜயின் திரைப்படங்கள் வெளியானது மற்றும் அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த படம் ஒரு அரசியல் படமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் இயக்குனர், நடிகர் நடிகைகள் மற்றும் பிற அறிவிப்புகள் முறையாக வெளிவரும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.