லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தின் முதற்கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. காஷ்மீர் சூட்டிங் குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.