தளபதி 68 திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளியன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, பலகாரம், புத்தாடை இவை அனைத்தையும் தாண்டி பெரிய நடிகர்களின் படம் வெளியாவதும் பண்டிகையின் முக்கியமான அங்கமாக கருத்தப்படுகிறது. அதிலும் நடிகர் விஜய் திரைப்படம் தீபாவளியன்று வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் பலருக்கும் பேரின்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

ஆனால் பிகில்  திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வெளியான நடிகர் விஜயின் படங்கள் ஏதும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படமாவது தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களை வைத்து  வெங்கட் பிரபு இயக்கவுள்ள தளபதி 68 படத்திற்கான  படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கும் நிலையில்,  இத்திரைப்படம் கண்டிப்பாக அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.  பிகில் திரைப்படத்திற்கு பின்பு நீண்ட இடைவெளியில் தளபதியின் திரைப்படம் தீபாவளியன்று வெளியாக இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.