ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் சென்ற 11ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் டைரக்டில் AK-62 படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் AK62 படத்தின் புது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்திற்காக நடிகர் அஜித் தன் உடல் எடையை குறைக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.