விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் -2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் நடப்பு ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் -2 சூட்டிங்கின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. மலேசியா, லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இப்போது அவர் உடல்நிலை தேறியிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் வாய்ப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதன் காரணமாக சென்னையின் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் நலம் தொடர்பான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என டைரக்டர் சுசீந்திரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிச்சைக்காரன்-2 சூட்டிங்கில் விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி 2 தினங்களுக்கு முன்பே சென்னையில் அவரு வீட்டுக்கு வந்துட்டாரு. 2 வாரம் மருத்துவர் ஓய்வெடுக்க சொல்லிருக்காங்க. கூடிய விரைவில் வீடியோ வாயிலாக பேசுவார். ஆகவே ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அதோடு விஜய் ஆண்டனி குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என  கேட்டுகிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.