தல அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இதையடுத்து அஜித் தனது 62வது படத்தில் தொடர்ந்து நடிப்பார் எனவும் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் அவரை மாற்றிவிட்டு மகிழ் திருமேனியை தேர்வு செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

இதற்குரிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இம்மாதம் வெளியிட்டு உடனே படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்தின் தந்தை மரணமடைந்ததால் பட அறிவிப்பை வெளியிடுவதிலும் படப்பிடிப்பை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் (அ) மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.