தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இதனால் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிடம் உதவி கேட்டுள்ளார்.

சென்ற மார்ச் 24-ஆம் தேதியன்று அவரின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷின் செய்தித்தொடர்பாளரும், விளம்பரதாரருமான யுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “டுவிட்டரில் உங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். ஐஸ்வர்யாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. சிக்கலை தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.