தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கடந்த 1993-ல் அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய “ஜென்டில்மேன்” படம் வாயிலாக டைரக்டராக அறிமுகமானார். இதையடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் உட்பட பல வெற்றிப்படங்கள் அவரது இயக்கத்தில் வந்தது. தற்போது அவர் இயக்கும் 14வது திரைப்படம் இந்தியன்-2  ஆகும்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ராம்சரணை வைத்து தன் 15வது படத்தை ஷங்கர் டைரக்டு செய்து வருகிறார். இப்படத்துக்கு “கேம் சேஞ்ஜர்” என்று பெயர் வைத்து உள்ளதாக அறிவித்துள்ளனர். தெலுங்கு மொழியில் தயாராகும் இப்படத்தை தமிழ், இந்தி மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினியாக நடிக்கிறார். அதோடு அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் போன்றோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.