நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான படம் “பதான்”. சித்தார்த் ஆனந்த் டைரக்டில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகியது. இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா, ஜான் ஆபிரஹாம், சல்மான் கான் போன்றோர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் வெளியாகி 20க்கும் அதிகமான திரையுலக சாதனைகளை படைத்தது.

கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பின் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஜனவரி 25ல் திரையரங்குகளில் வெளியான பதான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. பாலிவுட்டில் கடும் வீழ்ச்சிக்கு பின் தன்னுடைய கம்பேக் மூலம் நிகழ்ந்த வெற்றி என்பதால் ஷாருக்கான் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் பதான் வெற்றியை கொண்டாடும் விதமாக ரூ.10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ப்ளாக் பேட்ஜ் கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார்.