தலைநகர் டெல்லியில் தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் செல்லவே திணறி வரும் நிலையில், அங்குள்ள இளைஞர்கள் சிலர் விடாப்பிடியாகக் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பேட்டர் பந்தை அடித்துவிட்டு ஓடுகிறார். ஆனால், பீல்டிங் செய்யும் இளைஞரோ பந்து எங்கே போனது என்று தெரியாமல், அடர் பனிமூட்டத்திற்குள் பந்தைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறார்.
कोहरे में देश की सबसे बड़ी समस्या पर तो किसी का ध्यान ही नहीं गया….बेचारे गली क्रिकेटर आखिर करें तो करें क्या… pic.twitter.com/28JTLN70BT
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) January 3, 2026
பனிமூட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால், பேட்டருக்கு பந்து வீச்சாளர் முகம் கூடத் தெரிவதில்லை. பந்தை எடுத்து கீப்பரிடம் எறியலாம் என்றால், விக்கெட் கீப்பர் எங்கே நிற்கிறார் என்பதே அந்த பீல்டருக்குத் தெரியவில்லை.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது கிரிக்கெட் மேட்ச் மாதிரி தெரியல, பனிமூட்டத்துல நடக்குற தேடுதல் வேட்டை மாதிரி இருக்கு” எனத் தங்களது பாணியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
“அம்பயரை விடப் பனிமூட்டம் தான் இங்கே அதிக விக்கெட்டுகளை எடுக்கும் போல” எனச் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரல் வீடியோ.
