
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதையடுத்து எதிரே வந்த லாரியின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர், பேருந்து ஓட்டுனர் மற்றும் ஒரு பெண் பயணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மீட்பு படையினரின் உதவியோடு 2 வாகனத்தையும் பிரித்து, விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டனர். அதன் பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமாவும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.