அமெரிக்காவில் உள்ள தெற்கு டெக்சாஸில் விக்டோரியா ஸ்டேட் ஹைவே லூப் சாலைக்கு மேல் பகுதியில் தாழ்வான நிலையில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. திடீரென இந்த விமானம் சாலையில் நின்று கொண்டிருந்த 3 கார்கள் மீது வேகமாக மோதி இரண்டாக முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த விக்டோரியா பகுதி காவல்துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் 4 பேருமே உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ 31 என்ற ரக விமானம் ஆகும். இந்த விபத்தில் விமானியை தவிர விமானத்தில் ஒருவரும் இல்லை. இந்த விபத்தில் விமானி உயிர் தப்பிய நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.