தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உச்சி மாநாடு Umagine Chennai 2023-ஐ இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டை வளப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும் என முதல்வர் கூறினார். அதன் பிறகு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் டெக் சிட்டி என்ற பெயரில் தொழில்நுட்ப நகரங்களை உருவாக்க இருப்பதாக முதல்வர் கூறினார்.

இந்த தொழில்நுட்ப நகரங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்கும் முனைவோர்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்க கூடிய இடமாக அமையும் என்றார். மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவரும் மாநாட்டை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கூறினார்.