தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார். உடனே இபிஎஸ் கட்சியில் பெரும்பான்மை உடைய எம்எல்ஏவுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு முன்னாள் முதல்வர் என்ற காரணத்திற்காகவும் ஆன்லைன் தடை சட்ட மசோதா முக்கியமானது என்பதற்காகவும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறினார்.

இந்நிலையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு சம்மதமா என ஓ. பன்னீர் செல்வத்திடம் சபாநாயகர் கேட்டபோது எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் அவர் கட்சியில் இல்லை என்று கூறினர். உடனே ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. மேலும் அந்த சமயத்தில் ஓபிஎஸ் மனோஜ் பாண்டியனை தடுத்து நிறுத்தினார். அதன்பிறகு அதிமுகவினர் அவையை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.