சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி 20 கிலோமீட்டர் தொலைவில் தான் ஒரு மதுபான கடைகள் இருக்கிறது என்று கூற மதுபானம் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருளா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அந்த பகுதியின் டாஸ்மாக் நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.