தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் எந்த துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடத்தை விட எந்த துறைக்கும் பட்ஜெட்டில் இந்த வருடம் குறைவான நிதி ஒதுக்கப்படவில்லை.

அதன் பிறகு ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கான நிதி தொகையை இந்த வருடம் மத்திய அரசே நேரடியாக வழங்குவதால் இம்முறை 893 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தையும் இதில் சேர்த்தால் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு 4,352 கோடியாக இருந்திருக்கும். இது கடந்த வருடத்தை விட 70 கோடி அதிகம் தான் என்று கூறியுள்ளார்.