
தமிழகம் முழுவதும் இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முன்னதாக மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பண்டிகை மாற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு இன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாக மாற்றி உத்தரவிட்டது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை.
அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நாளை பகல் 12 மணி வரை மதுபான கடைகள் செயல்படாது. மேலும் இன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள், நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.